இலங்கை

மீண்டும் அதிகரித்தது டொலரின் பெறுமதி


அமெரிக்க டொலரின் விற்பனை விலை இலங்கை ரூபாயின் அடிப்படையில் 330 ரூபாயைத் தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (27) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (26) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.32 ரூபாயாகவும், விற்பனை விலை 328.69 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…