இலங்கை

சத்தர பதிப்பக ஸ்தாபகர் காலமானார்

சத்தர குழுமச் சேவையின் நிறுவனரும், ‘சத்தர’ முதன்மை ஆசிரியருமான கே.டி. சந்திரசோம பெரேரா தமது 82 ஆவது வயதில் நேற்று (30) காலமானார். 

அன்னாரது உடல், இல. 8/2, மெல்டர் பிளேஸ், நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது இறுதிச் சடங்குகள் ஜூன் மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த சந்திரசோம பெரேரா இலங்கையின் கல்வித்துறையில், குறிப்பாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கணித பாடம் தொடர்பாக மிகவும் பிரபலமான ஒரு மூத்த ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார். 

அவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (SLEAS) முன்னாள் அதிகாரியுமாவார். 

கலைப் பட்டதாரியான இவர், கல்வித்துறையிலான டிப்ளோமாவையும் கணித பாடத்திற்கான விசேட பயிற்சியையும் பெற்றவர். 

‘சத்தர’ பதிப்பகம் என்பது இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக மேலதிகப் புத்தகங்கள், வினாத்தாள்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் ஒரு முன்னணி கல்விப் பதிப்பக நிறுவனமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…