இலங்கை

தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய்


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அத்துடன் அதன் விற்பனை பெறுமதி 335.70 ரூபாவாக காணப்படுகின்றது. 

கடந்த 29 ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…