உலகம்

கொங்கோவை தொடர்ந்து பிரேசிலிலும் எபோலா வைரஸ்

பிரேசில் நாட்டில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

உகாண்டாவிலிருந்து வருகை தந்த பெல்ஜியம் நாட்டவர் ஒருவருக்கும், கொங்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமே காய்ச்சல் உள்ளிட்ட ஆரம்பகட்ட அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியாகும் என பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…