உலகம்

மியான்மரில் பயங்கர வெடிவிபத்து ; 45 பேர் உயிரிழப்பு

மியான்மரில் கட்டிடம் ஒன்றில் சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் 45 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள நாம்காம் நகரின் கவுங்டப் கிராமத்தில் நேற்று (31) நண்பகலில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சுமார் 100 இற்கும் மேற்பட்ட வீடுகள் இந்த வெடிவிபத்தின் தாக்கத்தால் பலத்த சேதமடைந்துள்ளன. 

மேலும், காயமடைந்த 74 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…