இலங்கை

பேருந்து சேவைகள் குறித்த இறுதி தீர்மானம் இன்று


டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்தாதது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக, பேருந்து சங்கப் பிரதிநிதிகள் இன்று (02) கூடவுள்ளனர். 

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேருந்து சேவைகளைத் தொடர்வது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

அனைத்து பேருந்து சங்கப் பிரதிநிதிகளும் இன்று காலை ஒன்றுகூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று எங்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சங்கப் பிரதிநிதிகள் வரவுள்ளனர். குறிப்பாக, இந்த எரிபொருள் சிக்கலில் இருந்து எமது தொழிலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து கலந்துரையாடவுள்ளோம். அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. 

அவர்கள் ஒரு கொள்கையில் உள்ளனர். எவ்வாறாயினும், தற்போது இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், சேவையில் இருந்து விலகுமாறு அனைத்து பேருந்து உரிமையாளர்களும் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், நாங்கள் சங்கமாகத் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி, இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை அறிவிப்போம்” என்றார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…