இலங்கை

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும்

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ‘சுபம்’ நிறுவனத்தின் ‘சிவகங்கை’ கப்பலானது, எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் என அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பல் பழுதடைந்ததை அடுத்து, அதன் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

தற்போது பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் புதன்கிழமை முதல் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. 

இச்சேவையானது வழமை போல் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பயணத்திற்கான பயணச்சீட்டுகளை www.sailsubham.com என்ற இணையதளத்தின் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…