No products in the cart.
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி!
சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400×4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது.
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளின் 7வது கட்டமாகும்.
அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் சதேவ் ராஜகருணா ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட உள்ளனர்.
இந்தப் போட்டி மே 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் குவாங்சோவில் உள்ள குவாங்டோங் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறும்.