இலங்கை

மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்


மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், முற்றாக அணைப்பதற்காகவும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தீயணைப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதி மக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…