கனடா

டொராண்டோவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை

செயல்பாட்டில் இல்லாத ஒரு மத்திய அரசு மானியத் திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி, வீடு வீடாகச் சென்று மோசடியில் ஈடுபட முயன்ற டொராண்டோவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து, அவர் மீது மோசடி முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கனடாவின் நார்த் பே பிராந்தியத்திலுள்ள ‘பிர்ச் ஹேவன்’ குதியில் கடந்த பிப்ரவரி 20-ஆம் திகதி காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிடிபட்ட நபர், அங்குள்ள ஒரு குடியிருப்புக்குச் சென்று தான் ஒரு முன்னணி எரிசக்தி நிறுவனத்தின் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அங்கு வசிப்பவர்களிடம், கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் அதிகாரப்பூர்வ ‘வீட்டு எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தின்’ கீழ் தமக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், தங்களின் வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றினால் 5,000 டொலர் முதல் 10,000 டாலர் வரை அரசு மானியம் பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

கனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்

logoலங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுகனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்Canada By Kamal 6 hours ago Follow us on Google Newsவிளம்பரம் கனடாவின் வடக்கு நோவா ஸ்கோடியாவில் செம்பு கம்பிகளைத் திருட முயன்றபோது ஏற்பட்ட மின்சாரத்…