இலங்கை

மனைவியைக் கொலை செய்த கணவன், கைதின் பின் மரணம்!


பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் படிவெல பகுதியிலேயே வசிந்து வந்த 61 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. 

நேற்று (10) காலை வேளையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கொலையைச் செய்த 59 வயதுடைய சந்தேக நபரான கணவனை பிங்கிரிய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர். 

இருப்பினும், கைது செய்யப்படும் போது சந்தேக நபருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பிங்கிரிய பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…