உலகம்

ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்


ஈரானுக்கு “மிகக் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தப்படும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களில், அமெரிக்க இராணுவம் ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

இதற்கிடையில், மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை ஆயுதமேந்திய கப்பல்கள் மற்றும் எண்ணெய் விநியோகக் கப்பல்கள் உட்பட அனைத்து வணிகக் கப்பல்களுக்காகவும் முழுமையாக மூடுப்படுவதாக ஈரான் இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பாரிய அளவிலான போர் மோதல் ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவும், ஈரானின் இந்த முடிவாலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

டிரம்பின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்க மத்திய கட்டளையகம் ஈரானின் தெற்குப் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் எந்தவொரு கப்பலும் தங்களது இலக்காக மாறும் என்று ஈரான் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…