No products in the cart.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இதற்கமைய, இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு, ஆரம்ப விக்கெட்டுக்காகக் களம் புகுந்த அணித்தலைவர் குசல் மெந்திஸ் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஜோடி சிறப்பானதொரு தொடக்கத்தை வழங்கியது. இந்த இணை முதலாவது விக்கெட்டுக்காக 26 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டது. எனினும், பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இலங்கை அணியின் ஓட்டக் குவிப்பு வேகம் சற்று மந்தமடைந்தது.
அதன்பின்னர், ஒரு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற அணித்தலைவர் குசல் மெந்திஸ் 23 பந்துகளுக்கு முகங்கொடுத்து 2 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக அதிரடியாக 36 ஓட்டங்களைக் குவித்தார்.
எவ்வாறாயினும், சரிவிலிருந்து இலங்கை அணியின் இன்னிங்ஸை வலுப்படுத்தி மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெந்திஸ், 39 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் உட்பட 51 ஓட்டங்களைப் பெற்று அரைச்சதம் கடந்தார். அவரது இந்த பெறுமதிமிக்க ஆட்டமே இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த உதவியமை குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் Shamar Joseph மற்றும் Jason Holder ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.















