No products in the cart.
100 முறை அவுட் ஆகாமல் இருந்த தோனி
ஐ.பி.எல். தொடரின் 57 ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 183 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3 ஆவது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6 ஆவது தோல்வி இதுவாகும்.
இப்போட்டியில் இறுதி ஓவரில் சிக்ஸ் அடித்து வெற்றிக்கு உதவிய அணி தலைவர் எம்.எஸ். தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 100 முறை அவுட் ஆகாமல் இருந்து சி.எஸ்.கே அணி தலைவர் தோனி போட்டியை முடித்துக் கொடுத்துள்ளார். இதில் சேஸிங்கில் 42 முறையும் வெற்றி பெற்ற போட்டிகளில் 60 முறையும் தோனி நாட் அவுட்டாக இருந்துள்ளார்.