கால்பந்துவிளையாட்டு

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் ‘D’ குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியின் 27ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலியாவுக்கான முதல் கோலை  Nestory Irankunda பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து திறம்பட விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 75ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தது.

இதன்படி, இப்போட்டியை அவுஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டது.

இந்த வெற்றியின் மூலம் ‘D’ குழுவின் புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், அதன் முதலிடத்தில் அமெரிக்க அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…