உலகம்

வானில் பறந்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானம் ; பரிதாபமாக உயிரிழந்த 12 பயணிகள்

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் விமானி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிசோரி மாநிலத்தின் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்ட குறித்த விமானத்தில், வானில் இருந்து குதித்து சாகசம் செய்யும் 11 ஸ்கை டைவிங் வீரர்கள் மற்றும் விமானி என மொத்தம் 12 பேர் பயணித்திருந்தனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள சாலை ஒன்றின் அருகே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தையடுத்து விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததுடன், அதில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மீட்புப் படையினர் மற்றும் அவசர சேவை பிரிவினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விமான விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…