கனடா

கனடாவில் 10000 டொலர் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு

நோர்த் பே நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 33 கிராமுக்கும் அதிகமான ஃபெண்டானில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மிசிசாகாவைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் திகதி காலை 9:30 மணியளவில் நீதிமன்றத்தில் ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதாக வந்த தகவலையடுத்து, நோர்த் பே காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: விசாரணையின் போது, அந்த நபரிடம் சட்டவிரோத ஃபெண்டானில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது விற்பனைக்காக வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்த சோதனையில், சுமார் 9,900 டொலர் சந்தை மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் 33 கிராம் ஃபெண்டானில் அடங்கும். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளைப் பாராட்டிய நோர்த் பே தற்காலிக துணை காவல் தலைவர் ஜெஃப் வார்னர் (Jeff Warner), “சந்தையில் புழங்கும் ஃபெண்டானில் போதைப்பொருளில் இருந்து ஒவ்வொரு கிராம் அகற்றப்படுவதும் நமக்குக் கிடைத்த ஒரு வெற்றியே என தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…