இலங்கை

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரிப்பு

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அலகான ‘பிரெட்டோ குறியீடு’ படி, நாட்டின் பல பகுதிகளில் இந்த மதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் சங்கம் இன்று வெளிப்படுத்தியுள்ளது.

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் கணக்கிடுவதற்கான சர்வதேச அலகாக இந்த ‘பிரெட்டோ குறியீடு’ பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், டெங்கு வைரஸை மிக அதிகமாகப் பரப்பக்கூடிய ‘ஈடிஸ் ஈஜிப்தி’ நுளம்புகளின் எண்ணிக்கை எந்த அளவில் உள்ளது என்பது கணக்கிடப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளின்படி, ஏதேனும் ஒரு நாட்டில் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஈடிஸ் ஈஜிப்தி நுளம்புகளின் அடர்த்தி 3 க்கும் குறைவான மதிப்பில் பராமரிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இந்த பிரெட்டோ குறியீட்டின் மதிப்பு மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார பூச்சியியல் சங்கம் இன்று சுட்டிக்காட்டியுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…