கனடா

கனடாவில் முதன்முறையாக லொட்டரியில் பெரும் தொகை வென்றுள்ள அக்கா தம்பி

கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு பெண், தன் தம்பியையும் கனடாவுக்கு வரவழைத்த நிலையில், இருவரும் சேர்ந்து வாங்கிய லொட்டரிச்சீட்டு அவர்கள் வாழ்வையே மாற்றியுள்ளது.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த மைலீன் P மற்றும் ஜோனத்தன் R ஆகிய இருவரும் லொட்டரிச்சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். 

இந்நிலையில், மார்ச் மாதம் 3ஆம் திகதி அவர்கள் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 75 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

75 மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது, இலங்கை மதிப்பில் 17,73,68,77,935.00 ரூபாய் ஆகும்.

அந்த லொட்டரியால் ஒரே நாளில் தங்கள் வாழ்வே மாறிப்போனதாக தெரிவிக்கும் ஜோனத்தன், தனக்கு தன் குடும்பம்தான் முக்கியம் என்கிறார். என் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்காகத்தான் கனடாவுக்கு வந்தேன், ஆகவே, அவர்களை கவனித்துக்கொள்வதுதான் என் முதல் கடமை என்கிறார் அவர்.

அவரது அக்காவான மைலீன், தனக்கென சொந்தமாக ஒரு வீடு வாங்க வாய்ப்புக் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

கனடா முழுவதும் சுற்றிப்பார்ப்பதுடன், முழுக் குடும்பத்துடனும், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஜப்பான் என உலக சுற்றுலா செல்ல தனக்கு ஆசை என்கிறார் மைலீன்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், கனடாவில் முதன்முறையாக லொட்டரியில் பெரும் தொகை வென்றுள்ள அக்கா தம்பி இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts