No products in the cart.
குறைந்த தங்க விலை வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்க விலையானது இன்று 28ஆம் திகதி மீண்டும் குறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 984,155 ரூபாவாக காணப்படுகின்றது.
அதன்படி, 24 கரட் தங்க கிராம் 34,720 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 277,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 31,830 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 254,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 243,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.