கனடா

கனடாவில் அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்து: ஒருவர் பலி

கனடாவின் ஸ்கார்பரோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டொராண்டோ விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் எக்லிண்டன் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக டொராண்டோ காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புக்குழுவினர், குடியிருப்பிற்குள் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர்.

அந்தப் பகுதிக்குள் சோதனையிட்டபோது, தீயில் கருகிய நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சிறிய அளவிலானவை என்றும் நம்பப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. இக்கோர விபத்து குறித்து டொராண்டோ காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

What's your reaction?

Related Posts