No products in the cart.
கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞன் கைது
9 மில்லிமீட்டர் ரக கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 30 தோட்டாக்களுடன் நபர் ஒருவர் மத்திய குற்றவியல் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணை பிரிவினரால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய இந்த சந்தேகநபர், வஸ்கடுவ பகுதியில் வைத்து இப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 8 கிராமுக்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் மற்றும் அதனை விற்பனை செய்து ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 98,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி வேறொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்ச ஆகியோரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.














