No products in the cart.
தலைமன்னாரில் சிக்கிய சட்டவிரோத ஷெம்பு பக்கெட்டுகள்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான ஷெம்பு (Shampoo)பக்கெட்டுகளை தலைமன்னாரில் கடற்படையினர் கைப்பற்றப்பட்டுள்ளன.
தம்மென்னா கடற்படைக் கப்பல் நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின்படி, தலைமன்னார் ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த ஷெம்பு பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சுமார் 5,386 ஷெம்பு பக்கெட்டுகளை கடற்படையினர் கைப்பற்றியதுடன், அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.














