உலகம்

முப்படைகளுக்கு முழு சுதந்திரம் மோடி அறிவிப்பு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் செவ்வாய் கிழமை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், இராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை எந்த வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் இராணுவம் தீர்மானிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார் என தகவல் வெளியாக்கியுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக உரிய பதிலடி கொடுப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்றும் தேசத்தின் ஆயுதப் படைகளின் தொழில்முறை திறன் சார்ந்து தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…