இலங்கை

20 கிலோ ஹசீஸ் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’  போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…