இலங்கை

சட்டவிரோத பீடி இலைத் தொகையுடன் லொறி ஒன்று கண்டுபிடிப்பு

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கடத்தப்படுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த பீடி இலைத் தொகையுடன் லொறி ஒன்றைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையின் ‘தம்பபன்னி’ நிறுவனம் மற்றும் நுரைச்சோலை பொலிஸார் இணைந்து புத்தளம், தழுவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் பீடி இலைத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த லொறியில் 20 உரைகளில் அடைக்கப்பட்டிருந்த 800 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை பொலிஸார் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகையும் லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…