இலங்கை

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

களனிவெளி வீதியில் ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும், நாவல – நாரஹேன்பிட்டி ரயில் கடவையை மூடுவது குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள நாவல – நாரஹேன்பிட்டி வீதி ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 01 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வரை களனிவெளி பாதையில் கொழும்பு கோட்டைக்கும் நுகேகொடை ரயில் நிலையத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது.

மேலும், அன்றைய தினம் பிற்பகலிலும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் களனிவெளி பாதையில் ரயில் இயங்கும் நேரங்கள் குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…