இலங்கை

17 வயது இளைஞனின் உயிரைப் பறித்த விபத்து

மாவத்தகம, அஹஸ்யானாபிட்டிய வீதியின் சமூக மண்டபத்தின் முன்னால் மாவத்தகமையிலிருந்து அஹஸ்யானாபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (04) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மாவத்தகம, சீராதுன்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞனும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…