No products in the cart.
கனடா பிரதமருக்கு ட்ரம்ப் வாழ்த்து
கனடா பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின், அண்டை நாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்து அறிவித்துள்ளார்.இதனால் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசம் அடைந்தது. பின்னர் முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை டிரம்ப் தொடர்ந்து விமர்ச்சித்து வந்தார்.
கனடாவை 51வது மாநிலமாக மாற்றுவோம் என டிரம்ப் கூறியது விமர்சனங்களை ஏற்டுத்தியது. இதன் பிறகு தற்போது பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற, மார்க் கார்னி டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
கனடா தேர்தலில் லிபரல் கட்சி அமோகம் மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி அவர், ”நான் பல மாதங்களாக எச்சரித்து வருவது போல அமெரிக்கா நமது நிலம், நீரை விரும்புகிறது. அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது. அது ஒரு போதும் நடக்காது” என மார்க் கார்னி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், கனடா பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். ”அதிபர் டிரம்ப் உடன் மார்க் கார்னி பேசியுள்ளார். பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாட்டு தலைவர்களும் எதிர்காலத்தில் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டனர்” என கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனடா பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.