உலகம்

பிரபல மொடலிங் கலைஞர் சூலா பத்மேந்திர காலமானார்

பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். 

அவரது இந்தத் திடீர் மறைவு இலங்கையின் மொடலிங் மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பல புதிய கலைஞர்களை சர்வதேச அளவிற்கு உருவாக்கிய பெருமைக்குரியவர். 

ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

அண்மைக்காலத்திலும் கூட பல முன்னணி மொடலிங் நிகழ்வுகள், ஆடைவடிவமைப்பு விழாக்கள் மற்றும் அழகிப்போட்டிகளில் அவர் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்று வந்துள்ளார்.  

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…