உலகம்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெற்றி

ஆசிய மகளிர் கிண்ணத் தொடரின் நேற்றைய (6) பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சோபனா மொஸ்டாரி 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சமூதி பிரபோதா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இந்நிலையில் 115 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

இலங்கை அணி சார்பில் ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

இந்த வெற்றியின் மூலம் ஆசிய கிண்ண அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணி உறுதி செய்துள்ளது.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…