விளையாட்டு

ருமேஷிற்கு வருடாந்தம் உயர்தர ஈட்டியை வழங்கவுள்ள டட்லி

உலகில் நடைபெறும் முன்னணிப் போட்டிகள் பலவற்றில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்கவிற்கு, ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச்சிறந்த ஈட்டித் தொகுதியை (Javelin set) வழங்குவதற்குத் தொழிலதிபர் டட்லி சிறிசேன முன்வந்துள்ளார். 

ருமேஷின் பயிற்றுவிப்பாளரான டோனி பிரசன்னாவுடன் கலந்துரையாடியதன், பின்னர் அவர், இந்த அனுசரணையை வழங்குவதற்கு இவ்வாறு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கைக்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தரும் வரை ருமேஷிற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் தொழிலதிபர் டட்லி சிறிசேன, ருமேஷின் பயிற்றுவிப்பாளருக்கு வாக்குறுதியளித்துள்ளார். 

இதற்கமைய, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டில் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஈட்டித் தொகுதிக்கு மேலதிகமாக, உலகின் மிக உயர்தரத்திலான ஈட்டித் தொகுதிகளை ஒவ்வொரு வருடமும் ருமேஷிற்கு வழங்கவும் டட்லி சிறிசேன தீர்மானித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…