கனடா

கனடாவில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிசார்

Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர். 

கனடாவில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிசார் | Thiaves Theft Atm In British Columbia

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.

இந்தக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.

கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரக் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

What's your reaction?

Related Posts

கனடாவில் ஓடும் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பித்த நபர் காயம்

கனடாவின் எல்ஜின் கவுண்டி பகுதியில், காவல்துறையின் காவலில் இருந்த நபர் ஒருவர் ஓடும் வாகனத்திலிருந்து தப்பித்து, பின்னர் காயமடைந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணையைத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மதியம்…