ஆசிய விளையாட்டு – கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு வெண்கலப் பதக்க

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. மூன்றாவது இடத்திற்கான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் மோதின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில் 146 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

Exit mobile version