ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, தொடக்கம் முதலே அதிரடியான மற்றும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கமைய, 17.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 87 ஓட்டங்களை (9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினார்.
- Home
- இலங்கைக்கு 8 விக்கெட்டுக்களால் அபாரமான ஆறுதல் வெற்றி!
இலங்கைக்கு 8 விக்கெட்டுக்களால் அபாரமான ஆறுதல் வெற்றி!
-
By me24tamil - 1
- 0

Related Content
-
சாதனையை முறியடித்த பாகிஸ்தான் தலைவ
By me24tamil 2 weeks ago -
நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி
By me24tamil 2 weeks ago -
ஆசிய விளையாட்டு - கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு வெண்கலப் பதக்க
By me24tamil 1 month ago -
இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக பிரமோத்ய விக்கிரமசிங்க சட்ட நடவடிக்கை
By me24tamil 1 month ago -
பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா
By me24tamil 1 month ago -
ஆசிய விளையாட்டு போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை
By me24tamil 1 month ago