No products in the cart.
கனடாவில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பேரி நகரில் 78 வயது முதியவர் ஒருவர், ஆன்லைன் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் சிக்கி சுமார் 2,00,000 கனடிய டொலர்கள் பணத்தை இழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 பிப்ரவரியில் சமூக ஊடகம் மூலமாக அறிமுகமான நபர் ஒருவர், இந்த முதியவருடன் ஆன்லைன் மூலம் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.பல மாதங்களாகத் தொடர்ந்து உரையாடி வந்ததால், நேரில் ஒருமுறை கூடச் சந்திக்காத நிலையிலும், அந்த நபருடன் தனக்கு ஒரு “உண்மையான பிணைப்பு” இருப்பதாக அந்த முதியவர் நம்பியுள்ளார்.இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மோசடிக்காரர், முதியவரைக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தி, அவரது வங்கிச் சேமிப்புக் கணக்குகளை அணுகும் அனுமதியைப் பெற்றுள்ளார்.














