இலங்கை

வரி முறையைச் சீரமைக்க IMF கோரிக்கை!

இலங்கையில் வருவாய் திரட்டலைத் தொடர்ச்சியாகப் பேணுவதோடு, வரி அமைப்பின் செயல்திறன் மற்றும் நியாயத்தன்மையை மேம்படுத்தும் இடைக்கால வருவாய் மூலோபாயமொன்றை உருவாக்கிச் செயல்படுத்துவது நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் எவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரச் சீரமைப்பிற்கு வரி முறையை மேலும் திறம்பட்டதாகவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி மற்றும் நியாயம் வழங்கக்கூடியதாகவும் மாற்றுவது அவசியமாகும். இதன் மூலமே நாட்டின் வருவாய் ஈட்டும் திறனைத் தொடர்ந்து பேண முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…