இலங்கை

இன்று இரவு இந்தியாவிற்குள் நுழையும் ஆழமான தாழமுக்கம்!

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் இந்தியாவின் வடக்கு ஆந்திர பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆழமான தாழமுக்கத்தால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்றபோதிலும், அமைப்பை நோக்கி வீசும் காற்று ஓட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போதைய மழைக்கால வானிலை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம் இந்தத் தகவலை அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…