கனடாவில் யூத ஆலய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பலி

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பெல்லெவில் பகுதியில் உள்ள ‘சன்ஸ் ஆஃப் ஜேக்கப்’ யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் கனடா ராணுவ வீரர் ஷான் வார்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, யூதர்களின் புனித நாளான ‘யோம் கிப்பூர்’ வழிபாட்டிற்காக மக்கள் ஜெப ஆலயத்தினுள் தயாராகிக் கொண்டிருந்தனர்.அப்போது, குயின்டே வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஷான் வார்டு, ஒரு டிரக் வாகனத்தில் வந்து, ஜெப ஆலயத்திற்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது ஷாட்கன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

Exit mobile version