Online poison seller awaits sentencing for 14 counts of assisting suicide: ஒன்லைனில் விஷம் விற்ற நபர் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கனேடியர்கள், பிரித்தானியர்கள் உட்பட பல பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி, அதை உட்கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட கென்னத் லா (61)என்னும் கனேடியர், இணையதளம் வாயிலாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் ரசாயனம் ஒன்றை விற்பனை செய்துவந்தார்.
