கனடா

கனடாவில் பூங்கா ஒன்றில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு!

கனடாவின் மேற்கு கியூபெக் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கட்டினோ பூங்காவில் இம்மாதத் தொடக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், கடந்த பெப்ரவரி மாதம் முதல் காணாமல் போன ஒட்டாவா நகரத்தைச் சேர்ந்த நபருடையது என காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.கடந்த செப்டம்பர் 7 அன்று கட்டினோ பூங்காவின் நடைபாதையில் பயணம் செய்த ஒருவர் மனித எச்சங்களைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் அளித்தார்.இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட MRC டெஸ் காலின்ஸ்-டி-எல்’அவுட்டாவாய்ஸ் காவல் துறையினர், அது ஒட்டாவாவைச் சேர்ந்த லூடோவிக் அந்தோணி புளோரண்ட் சோவின் என்பவரின் எச்சங்கள் என்பதை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். சோவின் கடந்த 2026 பிப்ரவரி 8 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்

What's your reaction?

Related Posts

கனடிய நகராட்சித் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி

கனடாவில் நகராட்சியொன்றின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். கனடாவின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற நகராட்சி இடைத்தேர்தலில் நீதன் ஷான் என்று அழைக்கப்படும் நீதன் சண்முகராஜா…