இலங்கை

திலித்தின் ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிப்பு

கட்சிக்காரர்களின் கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு அந்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரினர். இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, தாம் இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாகச் செயற்படுவதாகத் தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், இந்த வழக்குக்கு அடிப்படையான செம்மைப்படுத்தப்படாத அனைத்து காணொளிகளையும் அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது. அதன் பின்னர், இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…