No products in the cart.
கனடாவின் மேனிடோபாவில் பாம்புகளினால் ஏற்பட்ட தொல்லை
கனடாவின் மேனிடோபா மாகாணத்திலுள்ள ‘இன்டர்லேக்’ சமூகப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான பாம்புகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.எரிக்சுடேல் கர்லிங் கிளப்பின் தலைவரான 79 வயதான லாரி வெதர்பர்ன் இது குறித்துக் கூறுகையில், தமது பகுதியில் ‘கார்ட்டர்’ வகை பாம்புகள் கட்டுக்கடங்காமல் எங்கும் நிறைந்திருப்பதாகத் தெரிவித்தார்.கடந்த இரண்டு வாரங்களாகத் தினமும் வாலியொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு பல பாம்புகளைப் பிடித்து அகற்றி வருவதாகவும், ஒரே நாளில் 30 பாம்புகள் வரை பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.















