No products in the cart.
தேர்தல் நாளில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
கொழும்பு கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று 06 ஆம் திகதி காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் நபர் காயமடைதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக விஜய குமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.