இலங்கை

வந்தாறுமூலையில் பெண்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெதுப்பக உரிமையாளரின் மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (01) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி, வந்தாறுமூலை பகுதியிலுள்ள வெதுப்பக உரிமையாளரான கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுடன் அமைந்திருந்த வெதுப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர், அங்கு தனிமையில் இருந்த அவரது மனைவியான நாகமுத்து பிரேமாவதி என்பவரை கொலை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…