இலங்கை

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இர

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஆணைக்குழு இரத்து செய்துள்ளது. குறித்த கோரிக்கை பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதன்படி பொலிஸ் ஆணைக்குழு இன்று (01) கூடியதுடன், அக்கோரிக்கை தொடர்பான முன்மொழிவு இன்றைய தினத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த இடமாற்றங்கள் தொடர்பான முன்மொழிவை நிராகரிப்பதே பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானமாக இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன, அப்பணியகத்தின் பணிப்பாளர், இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட தரப்பினரின் இடமாற்ற முன்மொழிவு இரத்து செய்யப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…