இலங்கை

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுத

தமிழகம் – ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2 லட்சம் இந்திய ரூபா மதிப்பிலான கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ரோந்து படகில் மண்டபம் கடலோர பகுதியில் கண்காணித்தனர். அப்போது கடலோரத்தில் கிடந்த 6 மூடைகளை கைப்பற்றி சோதனையிட்டனர். இதில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 120 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. உயிருடன் இருந்த கடல் அட்டைகளை மறைவான இடத்தில் பதப்படுத்தி கள்ளப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மதிப்பு 2 லட்சம் இந்திய ரூபாய் என்பதுடன், பறிமுதல் செய்த கடல் அட்டையை மண்டபம் வனத்துறையினரிடம் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஒப்படைத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…