இலங்கை

சிறைச்சாலையில் ரிவால்வர் கண்டுபிடிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் எல் வார்டுக்குப் பின்னால் கழிவுநீர் ஓடும் வடிகால் அருகே மண்ணை அகற்றும் போது 0.38 ரிவால்வர் க்கப்பட்டது என வெலிக்கடை சிறைச்சாலையின்  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

பொரளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், வெலிக்கடை சிறைச்சாலையிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரிவால்வர் பல ஆண்டுகளாக மண்ணுக்கு கீழ் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், விசாரணைக்காக அது பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்  திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…