No products in the cart.
புதிய முதலீடு மூலம் குடியுரிமை திட்டம் ; அர்ஜென்டினா அரசு அறிவிப்பு
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில், முதலீட்டின் மூலம் அர்ஜென்டினா குடியுரிமை பெறுவதற்கான புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ‘அர்ஜென்டினா வாரம்’ என்ற வணிக நிகழ்வில், அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் லூயிஸ் கபுடோ மற்றும் அமைச்சரவைத் தலைவர் டியேகோ சாண்டில்லி ஆகியோர் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.















