இலங்கை

முன் பிணை மனுவை தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்

முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை இன்று (5) நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த முன் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். “சிரிலிய சவிய” கணக்கு தொடர்பான விசாரணை ஒன்றிலேயே தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். வைத்திய சிகிச்சை ஒன்றை பெருவதாக கூறி ஷிராந்தி ராஜபக்ச அண்மையில் சிங்கப்பூர் நோக்கி நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…